Breaking News

அவசர பயணத்துக்கான அனுமதியை இனி ஆட்சியர்கள் மட்டுமே வழங்க முடியும் - தலைமைச் செயலாளர் உத்தரவு

    அவசர பயணத்துக்கான அனுமதியை இனி ஆட்சியர்கள் மட்டுமே வழங்க முடியும் என்று தலைமைச் செயலாளர் க . சண்முகம் உத்தரவிட்டுள்ளார் . இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் , அனைத்து நகராட்சி ஆணை யர்களுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பிவைத்தார் .

அந்தக் கடிதத்தின் விவரம் :

   அவசர பயணத்தை மேற்கொள்ள அனுமதிச் சீட்டுகள் வழங் கும் அதிகாரமானது மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் இருந் தும் , சென்னை மாநகராட்சியில் ஆணையரிடம் இருந்தும் முறையே வட்டாட்சியர்கள் , துணை ஆணையர்களிடம் வழங்கப் பட்டிருந்தது . இந்த நடைமுறைகளில் அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை . மக்கள் பலரும் சாலைகளில் செல்லும் நிலை காணப்படுகிறது . இதைத் தொடர்ந்து , முதல்வர் பழனிசாமியின் உத்தரவின் அடிப் படையில் அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறையில் உடனடி யாக மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

   திருமணம் , மருத்துவமனைகளுக்குச் செல்வது , இறப்பு போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும் போது தனி உதவியாளர் (பொது) மூல மாக ஆட்சியரிடம் இருந்து அனுமதியைப் பெற வேண்டும் . இதே போன்று , சென்னை மாநகராட்சியில் ஆணையரிடம் இருந்து மட்டுமே அனுமதிச் சீட்டுகளைப் பெற முடியும்.

     பொது மக்க ளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இத்தகைய தடை முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் க . சண்முகம் தெரிவித்துள்ளார் .