Breaking News

அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து - Order& TVM CEO PROCEEDINGS

அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து - Order& TVM CEO PROCEEDINGS



    26 . 11 . 2018 - ம் தேதி பகல் 11 . 30 மணிக்கு திருவண்ணாமலை நகரம் அண்ணா சிலை அருகில் திருவண்ணாமலை ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மேற்படி கூட்டணியின் மாவட்ட தலைவர் திரு . முருகன் அவர்கள் தலைமையில் ஆண் ஆசிரியர்கள் 134 பேரும் பெண் ஆசிரியர்கள் 45 பேரும் தமிழக அரசாணை எண் 234 மற்றும் 303 ஆகியவற்றின் நகல்களை எரிக்கும் போராட்டம் நடத்த காவல்துறையால் அனுமதி மறுத்தும் மேற்படி நபர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய வகையில் சட்டவிரோதமாக ஒன்று கூடியவர்களை அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்தும் போராட்டம் நடத்த ஒன்று கூடுவது சட்டப்படி குற்றம் என கூறி கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் கலைந்து செல்லாமல் அதேயிடத்தில் பொது மக்கள் செல்லமுடியாமல் தடுத்தும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய வகையில் ஒன்று கூடியவர்களை 11 . 40 மணிக்கு கைது செய்தும் 12 . 00 மணிக்கு நிலையம் சேர்ந்து இது சம்மந்தமாக திருவண்ணாமலை நகர காவல் நிலைய குற்ற எண் 1578 / 2018 u / s 143 , 285 , 341 IPC - யின் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டது . இந்நிலையில் இவ்வழக்கு சம்மந்தமாக முருகன் மற்றும் 178 நபர்கள் மொத்தம் 179 நபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையினை இரத்து ( Quash ) செய்யவேண்டும் எனக் கோரி Crl . OPNO . 19600 / 2019 & Crl , MP No . 10051 / 2019 - ன் படி தாக்கல் செய்த மனுவை மாண்புமிகு .


    நீதியரசர் . ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் விசாரித்து 24 . 07 . 2019 - ம் தேதி “ In the result , the FIR in Cr . No . 1578 of 2018 is here by quashed and accordingly this Criminal Original petition is allowed . Consequently , miscellaneous petition is closed ” என ஆணை பிறப்பித்துள்ள தால் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முடிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கக் கொள்கிறேன்.