NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 412 பயிற்சி மையங்களும் தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 412 பயிற்சி மையங்களும் தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
2019 - 20 ஆம் கல்வியாண்டில் 03.05.2020 அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 412 பயிற்சி மையங்களில் 24 . 09 . 2019 முதல் 05.01.2020 வரை வார இறுதியில் முதுகலை ஆசிரியர்கள் மூலம் மாணவ / மாணவிகளுக்கு NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பின் , E box எனும் நிறுவனம் இணையவழி மூலமாக 412 பயிற்சி மையங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது . இவ்வகுப்பிற்கான சோதனை முன்னோட்டம் 17 . 03 . 2020 ( செவ்வாய்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது .
எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் மேற்கண்ட சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைப்பு வசதிகளை ( 2 Mbps speed குறையாமல் ) சரிப்பார்த்து கொள்ளுமாறும் , 17 . 03 . 2020 அன்று ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளரை ( Co - ordinator ) தவறாமல் வருகை புரியுமாறும் மற்றும் அச்சோதனை முன்னோட்டத்தின் செயல்பாடு குறித்த விவரங்களை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறும் அனைத்து பயிற்சி மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.