Breaking News

கொரோனா முன்னைச்சரிக்கைக்காக அறிவிக்கப்பட்ட விடுப்பு நாட்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதை தளர்த்தி ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டும் - ஆசிரியர் கழகம் கோரிக்கை

கொரோனா முன்னைச்சரிக்கைக்காக அறிவிக்கப்பட்ட விடுப்பு நாட்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதை தளர்த்தி ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டும் - ஆசிரியர் கழகம் கோரிக்கை
    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் திரு.கி.மகேந்திரன் அவர்கள் தமிழகஅரசிற்கு கோரிக்கை விடுத்து வெளியிட்ட அறிக்கை.


   உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை காக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வரும் அதி தீவிர நடவடிக்கைகளை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மனநிறைவோடுபாராட்டுகிறோம்.
வணங்குகிறோம்.


   மனிதகுலத்திற்கு எதிரான இந்த பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள அரசு வழிகாட்டும் அத்தனை முன்னைச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றுதல் மற்றும் நமது சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் எமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக ஆசிரியப்பெருமக்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

 வருமுன்காத்தல் பொருட்டு வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் இன்று மிகப்பெரிய உயிரிழப்பை சந்தித்து வரும் இத்தாலி நாட்டினைப்போன்று நாம் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளுதல், சுய ஊரடங்கு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றுவதோடு அவை முழுமையாக நடைபெற மாணவர்கள் பாதுகாப்பு கருதி 1 முதல் 9 வகுப்புகள் வரை தேர்வுகளை ரத்து செய்யவும்,10 வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்ததை போன்று 11மற்றும்12 வகுப்புகளின் அரசுப்பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்கவும் மாநில அரசை அன்புடன் கோருகிறோம்.


  மேலும் ஆசிரியர்களுக்கு நோய்பரவாமல் பாதுகாக்கும் நோக்கில் கொரோனா முன்னைச்சரிக்கைக்காக அறிவிக்கப்பட்ட விடுப்பு நாட்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதை தளர்த்தி ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டுகிறோம். நோய் பரவுதலின் தன்மையினைக்கணக்கில் கொண்டு தேவையின் அடிப்படையில் விடுமுறையைநீட்டித்து கோடை விடுமுறை முடிந்து ஜுன் மாதம் பள்ளிகளைதிறக்க அரசை கோருகிறோம். என்றும் சமுதாயநலனில் ... தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்