பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து அறிவுரை - அமைச்சர், செங்கோட்டையன்
பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து அறிவுரை - அமைச்சர், செங்கோட்டையன்
''கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து, டாக்டர்கள் வாயிலாக, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சார்ந்த கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடந்தது. ரூ.218 கோடிஅதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது :தேசிய போட்டிகள் மட்டுமின்றி, மாநில அளவில் விளையாடுவோருக்கும், இந்நிகழ்ச்சியில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.விளையாட்டு துறைகளில், மாணவர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறைக்காக, இந்த ஆண்டு, 218 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, நேரு விளையாட்டு மைதானத்தில், இந்திய தொழில் கூட்டமைப்புக்கு, ஓர் அரங்கு ஒதுக்கி தரப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.