பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பருவ தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளிவைப்பு
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பருவ தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளிவைப்பு
'பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பருவ தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம்' என, தகவல்கள் வெளியாகியுள்ளன.கொரோனா வைரஸ் பரவலால், உலகம் முழுவதும், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பள்ளிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் மற்றும்தமிழகத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கான தேர்வுகளையும், திட்டமிட்ட தேதியில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏப்., 14 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதன் பிறகும், இயல்பு நிலை திரும்புமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவு, ஏப்ரலில் முடிந்தாலும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. அதேபோல, தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, சிறிது அவகாசம் தேவைப்படும். எனவே, பருவ தேர்வுகளை, மே மாதத்திற்கு தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள், அதிகம் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.