கொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு இந்தியாவில் முதல்முறை
கொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு இந்தியாவில் முதல்முறை
இந்தியாவில் முதல்முறையாக, கொரோனா வைரசின் படங்களை, புனே தேசிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன நுண்ணோக்கி உதவியுடன் படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. தற்போது இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரியில் வூஹானிலிருந்து, வந்த கேரள மாணவிக்கு, இந்தியாவில் முதல்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், கொரோனா வைரசின் தோற்றத்தை, அதிநவீன மின்னணு நுண்ணோக்கியின் உதவியுடன் படங்கள் எடுத்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 'சார்ஸ் - சிஓவி-2' என்ற அந்த வைரசின் படங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளது.
இந்த வைரஸ், கடந்த 2012ல் பரவிய 'மெர்ஸ் - சிஓவி' மற்றும் 2002ல் பரவிய 'சார்ஸ் - சிஓவி' வைரஸ்களின் தோற்றங்களை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.