தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை
தனியார் பள்ளிகள் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தற்போது வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார் .
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு அலுவலர்களுக்கு பாது காப்பு உபகரணங்களை வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது : தனியார் பள்ளிகள் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தற்போது வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நகராட்சி சார்பில் குடிநீர் வரி வீட்டுவரி மற்றும் நிலுவை வரிகளை வசூலிப்பதை ஒத்திவைப்பது குறித்து உள்ளாட்சி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
144 தடை உத்தரவு முடிவுக்கு வந்த பின்னர் , பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து அறிவிக்கப்படும் . நீட் பயிற்சி இல்லை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் யுடியூப் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாக பேராசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது .
144 தடை உத்தரவு எவ்வளவுநாட்கள்வரை உள்ளதோ அது வரை நீட்தேர்வுக்கு பயிற்சி அளிக்க முடியாது . நிலைமை சரியானதும் 9 கல்லூரிகளில் 3,500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயார் நிலையில் இருக்கிறோம் . இவ்வாறு அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் கூறினார் .