பள்ளிக்கல்வி இயக்குனர் பரிசீலிக்க , ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிக்கல்வி இயக்குனர் பரிசீலிக்க , ஐகோர்ட்டு உத்தரவு
கோப்புகளில் கையெழுத்து போட லஞ்சம் கேட்கும் கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் பரிசீலிக்க , ஐகோர்ட்டு உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம் , மார்த்தாண்டம் வல்லந்தன்விளையைச் சேர்ந்த சத்தியராஜ் , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது : மேலப்பாளையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 1 . 3 . 2000 அன்று இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டேன் . கடந்த 2018 - ம் ஆண்டில் பிரகோடு பகுதியில் உள்ள பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார் . எங்கள் பள்ளி ஆசிரியர்கள் , அலுவலர்களின் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகளை பெறுவதற்காக மாவட்ட கல்வி அலுவலகத் திற்கு சென்று வருவது வழக்கம் . இந்த நிலையில் எங்கள் பள்ளி தொடர்பான கோப்புகளில் மாவட்ட கல்வி அதிகாரி கையெழுத்து போடும்படி அவரிடம் கேட்டேன் . ஆனால் அவர் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டார் . இதுகுறித்து மாவட்ட முதன்மை அதிகாரியிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை . அவரும் லஞ்சம் கேட்கிறார் . இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட மேல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பியும் எந்த பலனும் இல்லை . எனவே கடமையை செய்ய லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறியிருந்தார் இந்த வழக்கு நீதிபதி பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது . முடிவில் , மனுதாரர் அனுப்பிய புகார் மனுக்களை தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவ டிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு , வழக்கை முடித்துவைத்தார் .