Breaking News

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு தனித்தேர்வர்களுக்கானது - அமைச்சர் விளக்கம்

    ஏப்ரல் 2020 - ல் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 02 . 04 . 2020 முதல் 09 . 04 . 2020 வரை நடைபெறவுள்ளது . அத்தேர்விற்கு கடந்த ஆண்டில் நிரந்தரமான தேர்வு மையங்கள் அமைக்கக் கோரி தங்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள தேர்வு மையப் பட்டியல் பார்வை - ல் கானும் கடிதத்துடன் இணைத்தனுப்பப்பட்டது .


    அத்தேர்வு மையங்களுக்குரிய முதன்மை கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரை நியமனம் செய்து பட்டியலை 13 . 03 . 2020 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதுடன் , தாங்களே அப்பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் , வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் , துறை அலுவலர்களின் கைபேசி எண் மற்றும் தேர்வு மையத்தின் ( Mail ID ) மின்னஞ்சல் முகவரியை பெற்று அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


   தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட விவரத்தினை , தெரிவித்து தேர்வினை சுமூகமாக நடத்திட உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .

IMG-20200305-WA0003


IMG-20200305-WA0004