Breaking News

யார் இந்த ஆபிரகாம் லிங்கன்? அடிமைத்தனத்தை ஒழிப்பதில் இவர் ஆற்றிய பங்கு என்ன ?

🏁 அடிமைத்தனத்தையும், இனவெறி கொடுமைகளையும் எதிர்த்த வரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் பிறந்தார்.


🏁 இவர் நியு ஆர்லியன்சில் வசித்தபோது கறுப்பினத்தவர்களை கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு வேதனை அடைந்தார். இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என தன்னுடைய சிறு வயதில் உறுதியெடுத்தார்.

🏁 இவர் தனிப்பட்ட முறையில் படித்து வழக்கறிஞரானார். அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். தோல்விகளின் செல்ல மகனாக தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து பிறகு 25வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்ற தேர்தலில் வென்றார்.


🏁 1860ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863ஆம் ஆண்டு வெளியிட்டார். இதை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டுப் போர் 4 ஆண்டுகள் நடைபெற்று எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

🏁 அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசிய கெஸ்டிஸ்பர்க் உரை உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.


🏁 1864ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய லிங்கன் 1865ஆம் ஆண்டு மறைந்தார்.