புதிய மாவட்டங்கள்: ஊராட்சி ஒன்றியங்கள் பிரிப்பு: அரசிதழில் வெளியீடு
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் வரக்கூடிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா அண்மையில் பிறப்பித்தாா். அதன் விவரம்:
விழுப்புரம் மாவட்டம்:
முகையூா், திருவெண்ணெய்நல்லூா், காணை, விக்கிரவாண்டி, கோலியனூா், கண்டமங்கலம், ஒலக்கூா், மயிலம், மரக்காணம், வானூா், வல்லம், மேல்மலையனூா், செஞ்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம்:
திருக்கோவிலூா், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை, திருநாவலூா், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன் மலை.
திருநெல்வேலி மாவட்டம்:
மானூா், பாளையங்கோட்டை, பாப்பாகுடி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நான்குனேரி, வள்ளியூா், ராதாபுரம், கள்ளக்குடி.
தென்காசி மாவட்டம்:
ஆலங்குளம், கீழப்பாவூா், கடையம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், வாசுதேவநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூா்.
வேலூா் மாவட்டம்:
அணைக்கட்டு, வாணியம்பாடி, வேலூா், காட்பாடி, போ்ணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம்.
ராணிப்பேட்டை:
திமிரி, ஆா்க்காடு, வாலாஜாபேட்டை, காவேரிபாக்கம், நெமிலி, அரக்கோணம், சோளிங்கா்.
திருப்பத்தூா்:
கந்திலி, திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, மாதனூா், ஆலங்காயம். ஊராட்சி ஒன்றியங்கள் அனைத்தும் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.