பிளஸ் 2 தேர்வில் குளறுபடி கேள்வி, தவறான விடைகளால் மாணவர்கள் குழப்பம்
மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 வரலாற்று தேர்வில், இந்திய தேர்தல் ஆணையர் யார் என்ற கேள்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய விடைகள் தவறாக தரப்பட்டன.
மதுரை மாவட்ட அளவில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வரலாறு பாட இரண்டாம் திருப்புதல் தேர்வு நேற்று நடந்தது.இதில் 20வது கேள்வியாக ‛இந்தியாவின் தற்போதைய தேர்தல் ஆணையர் யார்' என கேட்கப்பட்டிருந்தது. அதில் 4 விடைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
விடைகளாக 1.அமித்ஷா, 2.எடப்பாடி பழனிச்சாமி, 3.ராம்நாத்கோவிந்த், 4.சத்யா ராக சாகு என தரப்பட்டிருந்தன. அதில் ஒன்றை மாணவன் தேர்வு செய்யவேண்டும். ஆனால் நான்கு பதில்களும் தவறானவை. தற்போதைய இந்திய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா உள்ளார்.தவறான விடைகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.