11,12ஆம் வகுப்பு தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை ( Hall Tickets ) 19.02.2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - வழிமுறைகள் வெளியீடு.
11,12ஆம் வகுப்பு தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை ( Hall Tickets ) 19.02.2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - வழிமுறைகள் வெளியீடு.
நடைபெறவுள்ள மார்ச் 2020 , மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்வுகள் தொடர்பாக , பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை ( Hall Tickets ) பதிவிறக்கம் செய்தல் குறித்து தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .
1 . பள்ளி தலைமையாசிரியர்கள் 19 . 02 . 2020 முதல் www . dge . tn . gov . in என்ற இணையதளத்திற்கு சென்று " online - portal ” என்ற வாசகத்தினை " Click ” செய்து “ HIGHER SECONDARY SECOND YEAR EXAM MARCH 2020 ” என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID , Password - ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .
2 . தற்போது , பள்ளியில் + 2 பயிலும் மாணாக்கர் , கடந்த மார்ச் 2019 / ஜூன் 2019 பருவங்களில் + 1 தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்கள் மற்றும் தற்போது + 2 தேர்வெழுதும் பாடங்கள் ஆகியவற்றினை தேர்வெழுதுவதற்கு ஒரே நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் .
3 . பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளுடன் , தங்கள் பள்ளியில் + 1 பயின்று , மார்ச் 2019 , + 1 தேர்விற்குப் பின்னர் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளி இடைநின்றவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .
4 . பள்ளித் தலைமையாசிரியர்கள் அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ( T . C ) பள்ளியில் மீள ஒப்படைத்த தேர்வர்களுக்கு மட்டும் தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை வழங்க வேண்டும் . அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ( Original T . C ) ஒப்படைக்காதவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை வழங்கக்கூடாது .
5 . அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ஒப்படைக்காத பள்ளி இடைநின்றவர்களை எக்காரணம் கொண்டும் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது . அத்தேர்வர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் Attendance Sheet , Seating Plan ஆகியவற்றில் Absent என பதிவு செய்ய வேண்டும் .
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்திடுமாறும் , இப்பொருள் சார்ந்து எவ்வித குழப்பமுமின்றி தேர்வுகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.