Breaking News

BEO தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்!

BEO தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்!









   பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் அளித்துள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற, வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு, பிப்., 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. தேர்வுக்கு, 'ஆன்லைன்' வழி விண்ணப்பம், 2019 டிச., 19ல் துவங்கியது. அதற்கான அவகாசம், ஏற்கனவே முடிந்த நிலையில், வரும், 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் வட்டார கல்வி அலுவலா் பணி தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 21-ஆம் தேதிவரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டதுடன், உத்தேச தோ்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வட்டார கல்வி அலுவலா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த நவ.27-இல் டிஆா்பி சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜன.9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த அவகாசத்தை நீட்டிப்புச் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு கோரிக்கைகள் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு செய்துள்ளது.



      தற்போது விண்ணப்பங்களை ஜன.21-ஆம் தேதி மாலை 5 மணி வரை வரை விண்ணப்பதாரா்கள் பதிவேற்றம் செய்யலாம். மேலும், தோ்வுக்கான உத்தேச தேதி வரும் பிப்.15, 16 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.01.2020 (செவ்வாய்) வரை நீட்டிப்பு # BEO தேர்வுக்கான தேதி : பிப்ரவரி 15 (சனி) மற்றும் 16 (ஞாயிறு) என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 13 / 2019 , நாள் . 27 . 11 . 2019 அன்று வெளியிடப்பட்டது . மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ண ப்பிக்க இறுதி நாள் . 09 . 01 . 2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது . 


    பல்வேறு தரப்பினரிடமிருந்து காலநீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் , பணியிடங்களுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது . தற்போது விண்ணப்பங்களை 21 / 01 / 2020 அன்று மாலை 5 . 00 மணி வரை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது . மேலும் தேர்விற்கான உத்தேச தேதி 15 / 02 / 2020 மற்றும் 16 / 02 / 2020 என தெரிவிக்கப்படுகிறது.