ரெட் அலெர்ட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் என்றால் என்ன ? அதை பற்றி வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன ?
தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மழையையொட்டி விடப்படும் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றால் என்ன? வேறு என்னென்ன அலர்ட் உள்ளன? கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட், யெல்லோ அலர்ட், க்ரீன் அலர்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும், பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.
அடுத்ததாக ஆம்பர் என்ற அலர்ட் முறை கணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பவையாகும். இதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கைகும் வகையில் யெல்லோ அலர்ட் விடுக்கப்படும். இந்த அறிவிப்பின்போது, அந்ததந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். அடுத்த சில நாட்களில் வானிலையில் சாதகமற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதை என்பதை குறிக்கும் வகையில் யெல்லோ அலர்ட் விடுக்கப்படும். அடுத்ததாக எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்கும் அறிவிப்பு க்ரீன் அலர்ட் ஆகும். ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டால் ஆரஞ்சு அலர்ட் விடப்படும்.