Breaking News

ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1 / 2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்படும்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் , இலால்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொட்டுணர் கருவி முறையிலான வருகைப்பதிவேடு முறைமை செயல்படுத்தப்பட்டுள்ளது . வருகைப் பதிவேடு முறைமைசார்பாக கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . )

1.பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை தரும் நேரங்களான காலை 9மணி வரை பச்சைநிறம் , 9மணி முதல் 9 . 15மணி வரை , மஞ்சள் நிறம் மற்றும் 9 . 5ணி முதல் 9 . 30மணி வரை - சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவி பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .

2 . தலைமையாசிரியர்கள் ஒவ்வொரு ஆசிரியரின் வருகைப் பதிவினை 9 . 30 மணிக்குள் தொட்டுணர் கருவி இணையதளத்தில் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள USER ID ( Udise Code ) மற்றும் PASSWORDயை பயன்படுத்தி பதிவேற்றம் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

3 . ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1 / 2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்படும் .

4 . பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் காலை 10 . 00 மணியளவில் பணிக்கு வருபவராயின் காலை 10 . 00 மணிக்கும் மாலை 6 . 00 மணிக்கும் தொட்டுணர் கருவியில் பதிவு மேற்கொள்ளப்படவேண்டும் . )

5 . சிறப்பு வகுப்பு மேற்கொள்ளும் ஆசிரியர்கள் காலை ஒரு மணி நேரம் முன்னதாகவும் , மாலையில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் தொட்டுணர் கருவியில் பதிவு மேற்கொள்ளப்படவேண்டும் .

6 . வருகைப் பதிவானது சூழ்நிலை காரணமாக இணையதள வசதி இல்லாத / மின் இணைப்பு இல்லாத நேரங்கள் ) இருப்பின் தனியாக பதிவேட்டில் பதிவு செய்யப்படவேண்டும் . ஆய்வு அலுவலர்கள் வருகை தரும்போது இப்பதிவேட்டினை பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

7 . பள்ளியிலிருந்து இடைப்பட்ட நேரங்களில் தலைமையாசிரியரோ அல்லது பணியாளரோ வெளியில் செல்வதாக இருப்பின் இயக்கப் பதிவேட்டில் ( Movement Register ) பதிவு மேற்கொள்ளப்படவேண்டும் .

8 .தலைமையாசிரியர் விடுப்பு மேற்கொள்ளும் நாட்களில் உதவி தலைமையாசிரியர் இப்பணியினை மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் செயல்படுத்திய அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

9 . இப்பணிக்கென பள்ளியில் பணிபுரியும் பணியாளர் ஒருவரை தனியாக நியமனம் செய்து எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் இப்பணியினை முடித்திடுமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .

10. சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து இப்பணியினை கண்காணிக்கப்படுவதால் தலைமையாசிரியர்கள் இப்பணியில் முழுப்பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . நம் கல்வி மாவட்டத்திலிருந்து பிற கல்வி மாவட்டமோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டமோ மாறுதலில் சென்றவர்கள் மற்றும் மாறுதலில் வந்தவர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று 20 . 12 . 2019 முற்பகல் 11 . 30 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பிவைத்திடுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

- மாவட்ட கல்வி அலுவலர்
இலால்குடி