2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி சான்றிதழ்கள் வேலிடிட்டி எப்போது முடிகிறது
கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மொத்தம் 6.6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் சலுகை காரணமாக சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு தேர்ச்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏழு ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சான்றிதழ்கள் 2020 ல் காலாவதியாகி விடும் என தேர்ச்சி பெற்றோர் மத்தியில் கருத்து நிலவி வந்தது.ஆனால் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஏழு ஆண்டுகள் செல்லும் என்பதால் 2021 செப்டம்பர் மாதம் வரை செல்லும் என்று சான்றிதழில் உள்ள தேதியைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.