UGC NET DEC 2019 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது
யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் யுஜிசி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ugcnet.nta.nic.in/ பக்கத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக பணிபுரிவதற்கும், உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதற்கும் நெட் தேர்வு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை இந்தாண்டு தற்போது வரும் டிசம்பர் மாதம் நெட் தேர்வு நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறும் நெட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று (நவ. 9) வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை யுஜிசி.,யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
NTA UGC NET Admit Card ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்:
- விண்ணப்பதாரர்கள் முதலில் https://ugcnet.nta.nic.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் NTA UGC NET Admit Card என்ற லிங்க் இருக்கும்.
- அதனை க்ளிக் செய்தால், நெட் தேர்வு ஹால் டிக்கெட் அடங்கிய மற்றொரு பக்கம் காட்டப்படும்.
- அதில் கேட்கப்பட்டுள்ள பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை டைப் செய்து, நெட் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டில் தங்களுடைய பெயர், புகைப்படம், தேர்வு மையம், பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை பார்த்துக் கொள்ளவும்.