Breaking News

TN EMIS மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் App - ல் பதிவு செய்வது எப்படி ? - திருச்சி மாவட்டம் மட்டும்

      மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப் TN EMIS என்ற செயலியினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பழைய செயலியில் வருகையினை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்துவந்தது. இனி ஆசிரியர்கள் தங்களது பழைய ஆப்பினை Uninstall செய்துவிட்டு பின்வறும் Link-ஐ கிளிக் செய்து புதிய ஆப்பினை பதிவிறக்கம் செய்து மாணவர்களது வருகையினை பதிவு செய்ய பயன்படுத்தவும்.



Click here to download the App in Play Store





      Open ஆனதும் Login ID, password என்ற பகுதி தோன்றும். அதில் Login ID என்பதில் உங்களது பள்ளியின் 11 இலக்க Dise எண்ணையும், Password என்பதில் உங்களது பள்ளியின் EMIS Password -ஐயும் கொடுத்து Sing in கொடுத்து உள் நுழையவும்.








          அதில் Attendance, TNTP என்று இரண்டு பகுதிகளில் Attendance என்பதை கிளிக் செய்யவும்.அதில் உங்களது பள்ளியின் விவரங்கள் தோன்றும்.





     பின் வலது மேல்புறத்தில் + என்ற உள்ளதை கிளிக் செய்யவும். அதில் வகுப்பு வாரியாக கிளிக் செய்தால் மாணவர்கள் பட்டியல் வரிசையாக இருக்கும். அதில் மாணவர்களுக்கு நேர் பகுதியில் P என்று இருக்கும், மாணவர் வந்திருந்தால் அதை மாற்றம் செய்ய தேவை இல்லை, மாணவர் வரவில்லை என்றால் மட்டுமே அதனை கிளிக் செய்து A என்று மாற்றிக்கொள்ளவும்.





      பின்பு அனைத்து மாணவர்களது வருகையினை சரிபார்த்து கடைசியாக கீழ் SAVE என்பதை கிளிக் செய்யவும்.