Breaking News

தவறின்றி பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களை நிரப்ப தேர்வு துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலில், பெயர் விபரங்களை தவறின்றி, தெளிவாக பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வு துறை, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக, பெயர் பட்டியல் தயாரிக்க, அரசு தேர்வு துறை சார்பில், உறுதிமொழி படிவம் வழங்கப் பட்டுள்ளது.

இந்த படிவத்தில், தமிழில், 45 எழுத்துக்கள், ஆங்கிலத்தில், 34 எழுத்துக்கள் எழுதும் வகையில், இடம் தரப்பட்டுள்ளது. அதற்கு மேலும் எழுத்துக்களை பதிவு செய்ய, 'எமிஸ்' இணையதளத்தில் இட வசதி செய்யப் பட்டுள்ளது. எனவே, தவறின்றி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.