Breaking News

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -4

   தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -4






46
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2017-18ம் ஆண்டிற்கான அறிவிப்புகள் எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் அமைத்தல் – “கோயம்புத்தூர் மாவட்டத்தில் வானியல், புதுவைக் கண்டுபிடிப்புகள் சாந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
47
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “சென்னை மாவட்டத்தில் அச்சுக்கலை தொடர்பான சிறப்பு நூலகம்” மற்றும் காட்சிக்கூடம் அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
48
2018
பள்ளிக் கல்வி – தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், ஒரு இலட்சம் சதுர அடி பரப்பிள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு – நிர்வாக ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது,
49
2018
பள்ளிக் கல்வி – அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
50
2018
பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மின் நூலகம் (Digital Li brary ) அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.





51
2017
பள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.
52
2017
பள்ளிக் கல்வி – சுயநிதி அடிப்படையில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைமையாளர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அக்குழுவிற்கு புதிய தலைமையாளர் நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
53
2017
பள்ளிக் கல்வித் துறை – திருக்குறளில் உள்ள நுhற்றி ஐந்து அதிகாரங்களை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாகப் பயிற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
54
2014
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் 2014- விடைத்தாள் முகப்புச்சீட்டு படிவங்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து அச்சிட்டு வழங்கிட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
55
2014
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்தாட்களின் முகப்புச் சீட்டிலுள்ள Barcode-னை ஸ்கேன் செய்வதற்கு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு தேவைப்படும் Barcode Readers கொள்முதல் செய்யப்பட்டதற்கு பின்னேற்பு மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.





56
2013
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
57
2013
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
58
2013
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது
59
2013
பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
60
2011
பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 - 2011-2012ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6428 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.




தொகுப்பு
அரசாணைகள் 
பார்வையிட 

அரசாணைகளின் தொகுப்பு - 1
1 - 15

அரசாணைகளின் தொகுப்பு - 2
16 - 30

அரசாணைகளின் தொகுப்பு - 3
31 - 45

அரசாணைகளின் தொகுப்பு - 4
46 - 60

அரசாணைகளின் தொகுப்பு - 5
61 - 75

அரசாணைகளின் தொகுப்பு - 6
76 - 90

அரசாணைகளின் தொகுப்பு - 7
91 - 105

அரசாணைகளின் தொகுப்பு - 8
106 - 116