Breaking News

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -2

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -2





16
2018
பள்ளிக் கல்வி – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு – 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
17
2018
பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15% ஐ அனைத்து மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
18
2018
பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது
19
2018
பள்ளிக் கல்வி – 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 95 அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
20
2018
பள்ளிக் கல்வி – 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு – 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் உருவாக்குதல் – பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.





21
2018
பள்ளிக் கல்வி – டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது – 2017-2018 ஆம் கல்வியாண்டு முதல் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது.
22
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களைப் பெற மென்பொருள் உருவாக்குதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.
23
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “பார்வையற்ற வாசகர்களுக்கு நூலகத்தில் தனிப்பிரிவு தொடங்குதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.
24
2018
பள்ளிக் கல்வி . தொழிற்கல்வி - பாடத்திட்டம் - மேல்நிலைக் கல்வி - 2018-19 ஆம் கல்வியாண்டு - தொழிற்கல்வி - கலைப்பிரிவு - பாடப் பிரிவுகளில் உள்ள பாடப் பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
25
2018
பள்ளிக் கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு தவங்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.





26
2018
பள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது
27
2018
பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “நூலக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.
28
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “நூலகங்களை கணினிமயமாக்குதல்” - ஆணை வெளியிடப்படுகிறது
29
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் - 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “அனைத்து மாவட்ட மைய நூலகங்களை நவீன மயமாக்குதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.
30
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “அனைத்து மாவட்ட நூலக வலைதளங்களை மேம்படுத்துதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.








தொகுப்பு
அரசாணைகள் 
பார்வையிட 

அரசாணைகளின் தொகுப்பு - 1
1 - 15

அரசாணைகளின் தொகுப்பு - 2
16 - 30

அரசாணைகளின் தொகுப்பு - 3
31 - 45

அரசாணைகளின் தொகுப்பு - 4
46 - 60

அரசாணைகளின் தொகுப்பு - 5
61 - 75

அரசாணைகளின் தொகுப்பு - 6
76 - 90

அரசாணைகளின் தொகுப்பு - 7
91 - 105

அரசாணைகளின் தொகுப்பு - 8
106 - 116