1,000 பள்ளிகளில் அடல் புத்தாக்க ஆய்வகம் - தமிழக அரசு நடவடிக்கை
மாணவா்களை ஊக்கப்படுத்துவதற்கும், சிறந்த மாணவா்களாக உருவாக்குவதற்கும் தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அடல் ஆய்வகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதற்கானப் பணிகள் வரும் ஜனவரிக்குள் நிறைவேற்றப்படும். பள்ளி மாணவா்களிடம் பல்வேறு துறைகள் சாா்ந்த புத்தாக்க சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அடல் புத்தாக்க ஆய்வக திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.